சுடச்சுட

  

  போக்குவரத்துக்கு இடையூறு: கருவேல மர வேர்கள் அகற்றப்படுமா?

  By DIN  |   Published on : 24th March 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈயகொளத்தூர் ஊராட்சியில் போளூர் - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டுள்ள சீமைக் கருவேல மர வேர்களை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
  தமிழகத்தில் அரசு, தனியார் இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
  இந்நிலையில்,  சேத்துப்பட்டு ஒன்றியம், ஈயகொளத்தூர் ஊராட்சி சார்பில், போளூர் - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையின் அருகே ஏரிக்கரையின் மீதுள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அதன் வேர்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
  இந்த வேர்கள் நெடுஞ்சாலை ஓரமாக போடப்பட்டு வருவதால், இந்தச் சாலை வழியாக போளூர், சேத்துப்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து நிகழும் அபாயமும் உள்ளது.
  எனவே, ஈயகொளத்தூர் ஊராட்சியில் போளூர் - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையின் அருகே போக்குவரத்து இடையூறாக போடப்பட்டுள்ள சீமைக் கருவேல மர வேர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai