சுடச்சுட

    

    ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 39 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
    ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் கார்ப்பரேஷன் வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கியிருந்த தொழில் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வட்டி தள்ளுபடியுடன் 39 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.6.10 லட்சம் கடன் தொகை வசூல் செய்யப்பட்டது.
    இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மேரிஆன்செலம் கடன் தீர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆவணங்களை வழங்கினார். சார்பு நீதிபதி எழில்வேலவன்,
    ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமலதாடேனியல், கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் சுகுமார், உதவி மேலாளர் ப்ரியன், சட்டப்பணிகள் குழு அலுவலர் சையத்ரஷீத், வழக்குரைஞர்கள் வி.வெங்கடேசன், திரிலோகசுந்தர், திருஞானம், பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai