Enable Javscript for better performance
மாணவர்களுக்கு புத்தக அறிவுடன் உலக அறிவும் தேவை: மின் வாரிய அதிகாரி அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு புத்தக அறிவுடன் உலக அறிவும் தேவை: மின் வாரிய அதிகாரி அறிவுரை

    By DIN  |   Published on : 24th March 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தக அறிவுடன் உலக அறிவும், செயல் அறிவும் தேவை என்று திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பி.ஜி.கோபி அறிவுரை வழங்கிப் பேசினார்.
    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் மின்சாதன புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். முதல்வர் ஜி.மோகன்குமார், ஆலோசகர் எம்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    துறைத் தலைவர் எஸ்.சிவக்குமார் வரவேற்றார். திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பி.ஜி.கோபி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தக அறிவுடன், உலக அறிவும், செயலறிவும் கண்டிப்பாகத் தேவை. நாம் புத்தகங்களில் படிப்பதை எப்போது செயல்முறையில் செய்து பார்க்கிறோமோ, அப்போதுதான் அதைப் பற்றிய முழு விவரமும் நமக்குக் கிடைக்கும்.
    இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் மாணவர்கள் தங்களுடைய யோசனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும். கண்காட்சிகள் நமக்கு பலவற்றை புதிதாக அறிமுகம் செய்யும். பல புதிய விஷயங்களை தேட வைக்கும் என்றார்.
    இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரிப் பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ், மாணவர் மன்றத் தலைவர் ஆறுமுகம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai