சுடச்சுட

  

  அகில இந்திய குத்துச்சண்டை போட்டி: திருவண்ணாமலை பள்ளி மாணவி சிறப்பிடம்

  By DIN  |   Published on : 25th March 2017 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க குத்துச் சண்டை போட்டியில் திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.
  மகாராஷ்டிர மாநில சதுரங்க குத்துச்சண்டை அமைப்பு சார்பில், அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க குத்துச்சண்டை போட்டிகள் அண்மையில் மும்பை வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
  இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி சார்பில் கலந்துகொண்ட மாணவி எம்.அக்சயா, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.  போட்டியில் வென்ற மாணவியை பள்ளித் தலைவர் ஆர்.குப்புசாமி, பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவீதா, முதல்வர் எஸ்.லதா ஆகியோர் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai