சுடச்சுட

    

    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில், உலக தண்ணீர் பாதுகாப்பு தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை அலுவலர் தி.விஜய் ஆனந்த் பேரணியை வழி நடத்தினார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியின்போது, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விழிப்புணர்வு பதாகைகளையும் மாணவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.
    இதில், உதவித் தலைமை ஆசிரியர்கள் எஸ்.பாஸ்கரன், ஆனந்தி, எம்.ராமலிங்கம், தேசிய பசுமைப்படை ஆசிரியர் டி.எஸ்.பாலாஜி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai