Enable Javscript for better performance
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கட்டுரைப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 25th March 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு மாணவர்களுக்கான கல்வி மையமான அக்னி சிறகுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
    இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    உலகமயச் சூழலில் ஊடக அறம் என்னும் தலைப்பில் கட்டுரையை தெளிவான கையெழுத்தில் 10 பக்கத்துக்குள் எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரை மாணவர்களது சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
    போட்டியில் இளநிலை, முதுநிலை பட்டம் பயிலும் மாணவர்களும், கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
    போட்டியில் கலந்துகொள்ள எவ்விதக் கட்டணமும் இல்லை. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தாங்கள் கல்லூரியில் பயிலுவதற்கான அடையாளமாகத் தங்கள் அடையாள அட்டை நகலை இணைக்க வேண்டும்.
    சிறந்த 10 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டுரையாளருக்கும் ரூ.ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தக மதிப்புரையில் கலந்துகொள்ள அனுமதியும், வந்து செல்ல பயணப்படியும் வழங்கப்படும்.
    பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரை நூலில்
    ஐஎஸ்பிஎண் எண்ணுடன் வெளியிடப்படும்.
    கட்டுரைகள் வந்து சேர கடைசி நாள் மார்ச் 30 ஆகும். கட்டுரைகளை அக்னி சிறகுகள், நெ.118, ஆற்காடு சாலை, செய்யாறு - 604407, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai