சுடச்சுட

  

  தலைமை ஆசிரியர் வராததைக் கண்டித்து பள்ளிக்கு பூட்டுப் போட்டு போராட்டம்

  By DIN  |   Published on : 25th March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அருகே நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பல மாதங்களாக வராததைக் கண்டித்து, பள்ளிக்கு பூட்டிப் போட்டு பெற்றோர், பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லுர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் 110-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிதாஸ் உள்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனராம்.
  இந்நிலையில், தலைமை ஆசிரியர் காளிதாஸ் எவ்வித அறிவிப்புமின்றி கடந்த 2016 டிசம்பர் மாதம் முதல் பள்ளிக்கு வரவில்லையாம். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
  எனினும், அந்த மனுவின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததுடன், பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கமலக்கண்ணன், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai