Enable Javscript for better performance
தொழில்நுட்பக் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், தனிஅலுவலர் டி.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டடவியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ்.சந்தோஷ் வரவேற்றார்.
    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஆர்.மணிவண்ணன் கலந்துகொண்டு, கட்டடவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம், புதிய கான்கிரீட் தொழில்நுட்பம் குறித்து சிறப்புரையாற்றினார்.
    இதில், துறை பேராசிரியர்கள் ஆர்.சரண்யா, பி.ஆனந்த், பி.ஜெகன், வி.ஜெயக்குமார், வி.ரேகா, ஜெ.பிரியங்கா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai