Enable Javscript for better performance
பழைய அரசு மருத்துவமனையை முறையாக இயக்கக் கோரி திருவண்ணாமலையில் இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழைய அரசு மருத்துவமனையை முறையாக இயக்கக் கோரி திருவண்ணாமலையில் இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் இயங்கி வந்த பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் முறையாக இயக்கக் கோரி, இளைஞர்கள், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது.
     திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதும், இந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
    பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் மாற்றப்பட்டது. ஆனால், பழைய மருத்துவமனை இயங்கி வந்த இடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவும், புறநோயாளிகள் பிரிவும் மட்டும் இயங்கி வருகிறது.
    இந்தப் பிரிவுகளும் சரிவர இயங்குவதில்லை. சில நாள்களில் ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லாத நிலை உள்ளது. எனவே, இந்த மருத்துவமனையை பழையபடி நல்ல முறையில் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    இந்நிலையில், மருத்துவமனையை பழையபடி இயக்கக் கோரி, இளைஞர்கள், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai