சுடச்சுட

  

  மகள் பெயரில் மருத்துவமனை நடத்தியதாக செங்கத்தில் போலி பெண் மருத்துவர் கைது

  By DIN  |   Published on : 25th March 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் எம்பிபிஎஸ் படித்த மகளின் பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததாக, அவரது தாயான போலி மருத்துவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  மேலும், மருந்தகத்தில் மருத்துவம் அளித்து வந்தவர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
  முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல், செங்கம் பகுதியில் சிலர் அலோபதி மருத்துவம் அளிப்பதாகவும், கருக்கலைப்பில் ஈடுபடுவதாகவும் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கிரிஜாவுக்கு புகார்கள் சென்றன.
  அதன்பேரில், இணை இயக்குநர் கிரிஜா, செங்கம் டிஎஸ்பி ஷாஜித்தா மற்றும் மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் செங்கம் இராஜ வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.
  அங்கு நந்தினிப்பிரியா என்பவர் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வரும் நிலையில், சித்த மருத்துவம் படித்த அவரது தாய் ரேணுகா, நந்தினிப்பிரியாவின் பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்தது.
  மேலும், ரேணுகா அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும், கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
  இதையடுத்து, அந்த மருத்துவமனையில் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள், மருந்து, மாத்திரைகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், ரேணுகாவை செங்கம் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
  மேலும் 2 பேர் கைது: இதேபோல, மேல்செங்கம் பகுதியில் மருந்தகம் நடத்திக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்த பாரதிதாசன் (36), மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு மருத்துவம் பார்த்து வந்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (35) ஆகியோரை மேல்செங்கம் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai