சுடச்சுட

  

  வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமம், பேப்பர் மில் பகுதியில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா, 108 சங்காபிஷேக விழா, ஸ்ரீபச்சையம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
  பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 48 நாள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான வியாழக்கிழமை மண்டலாபிஷேக பூர்த்தி விழா த.மகேந்திர பந்தாரியார் தலைமையில் நடைபெற்றது.
  இதையொட்டி, காலை 10 மணிக்கு மண்டலாபிஷேக நிறைவு வேள்வி பூஜை, 108 சங்காபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீமன்னார்சாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கண்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai