சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 25th March 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் மாற்றுத் திறாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
    ஆரணி நகராட்சி, அருணகிரிசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பூ.துரைஅரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் இரா.காமாட்சி, இடைநிலை கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
    கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வி.புருஷோத்தமன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.விஜயகுமார், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai