சுடச்சுட

    

    குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 26th March 2017 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    இதன் காரணமாக திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், மகாதேவன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது, பழுதான ஆழ்துளை கிணறுகளை விரைவில் சீரமைத்து ஓரிரு நாளில் குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai