Enable Javscript for better performance
செய்யாறு சீரமைப்புக் குழுவினருடன் அதிகாரிகள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு சீரமைப்புக் குழுவினருடன் அதிகாரிகள் ஆலோசனை

    By DIN  |   Published on : 26th March 2017 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தில் செய்யாறு சீரமைப்புக் குழுவினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
    செங்கம் பகுதியில் பாயும் செய்யாறு சீமைக் கருவேல மரங்கள் முளைத்தும், கழிவு நீர் தேங்கியும், ஆக்கிரமிப்புகளாலும் பாழடைந்து இருந்தது. இந்த ஆற்றை சீரமைக்க அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், செங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி செய்யாறு சீரமைப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, செய்யாற்றை சீரமைக்கும் பணியை கடந்த 4-ஆம் தேதி தொடங்கினர்.
    செங்கம் மேம்பாலத்தின் அருகே தொடங்கப்பட்ட இந்தப் பணி, ஒவ்வொரு வாரத்திலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி தற்போது செங்கம் ஆஞ்சநேயர் கோயில் முதல் எம்ஜிஆர் நகர் வரை நடைபெற்று முடிந்துள்ளது.
    இந்நிலையில், செங்கம் வட்டாட்சியர் உதயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம் ஆகியோர் செய்யாறு சீரமைப்புக் குழுவினரை அழைத்து செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
    அப்போது, செய்யாறு சீரமைப்புக் குழுவினருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்ததுடன், செய்யாறில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், சீரமைப்புப் பணியின்போது, செய்யாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் செய்யாறு சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai