சுடச்சுட

  

  பெற்றோரின் கனவை மாணவர்கள் நனவாக்க வேண்டும்: நடிகர் கிரிஷ் அறிவுரை

  By DIN  |   Published on : 26th March 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெற்றோரின் கனவை மாணவர்கள் நனவாக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், பின்னணிப் பாடகருமான கிரிஷ் அறிவுரை வழங்கினார்.
  திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் பள்ளி, ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். நிர்வாகி விஜிதா குமரன், அருணை பொறியியல் கல்லூரிப் பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி முதுநிலை முதல்வர் ஜே.டி.ஜான்சன் வரவேற்றார்.
  சினிமா நடிகரும், பின்னணிப் பாடகருமான கிரிஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியாதவது: மாணவ, மாணவிகளாகிய நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. எந்த அளவுக்கு படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு படிப்பு மீது மாணவர்களுக்கு வெறுப்பு வரும். மாணவர்கள் தங்கள் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
  மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
  இதைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கிரிஷ் பரிசுகள், கோப்பைகளை வழங்கினார். விழாவில், பள்ளிச் செயலர் பரத்ராஜ், ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சிம்சன் மேஷாக், ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி துணை முதல்வர் நிஷிதா செல்வன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai