சுடச்சுட

  

  மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்: மருத்துவமனையில் அனுமதி

  By DIN  |   Published on : 26th March 2017 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தானிப்பாடி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  தானிப்பாடி அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 197 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தனுசு, நதியா, பெருமாள், அஜீத், சித்ரா, சுரேஷ் ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
  இதைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், மாணவ, மாணவிகள் அனைவரும் ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் சஜேஸ்பாபு ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் விசாரித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மண்ணு, பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai