சுடச்சுட

  

  தண்டராம்பட்டில் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  தண்டராம்பட்டு - சாத்தனூர் சாலையில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையை கீழ்வணக்கம்பாடி சாலையில் உள்ள கணபதி நகருக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து தகவலறிந்த கீழ்வணக்கம்பாடி பொதுமக்கள் சனிக்கிழமை தண்டராம்பட்டு வட்டாட்சியர் சஜேஷ்பாபுவைச் சந்தித்து, தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடையை வைத்தால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். எனவே, தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் மதுக் கடை மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முறையிட்டனர். மேலும், தங்களது கோரிக்கை அடங்கிய மனுவையும் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai