சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாகத் தேர்வில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது.
  சென்னை பிரேக்ஸ் இண்டியா, பெங்களூரு ஓம் சாய் இண்டக்ஸ், சென்னை லியோ பிரஸ்சிங்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ், ஹனில் டியூப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில் இந்த வளாகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
  இதில் இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த வளாகத் தேர்வில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 226 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்.
  விழாவில் கல்லூரி இயக்குநர்கள் டி.கே.பி.மணி, வி.ரகுராம், டி.பெருமாள் ரெட்டியார், எஸ்.வேமன்னா, எஸ்.ரஷ்யராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சுரேஷ், கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai