Enable Javscript for better performance
மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்: வேலூர் தொழிலாளர் நல துணை ஆணையர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்: வேலூர் தொழிலாளர் நல துணை ஆணையர் பேச்சு

    By DIN  |   Published on : 26th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று, புதுமை படைக்க வேண்டும் என்று சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் வேலூர் தொழிலாளர் நல துணை ஆணையர் ஜெயபாலன் பேசினார்.
    சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் 19-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், கல்லூரித் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை வகித்தார். செயலர் டாக்டர் செந்தில் குமார், துணைத் தலைவர் பொறியாளர் பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் முருகன் வரவேற்றார். முதல்வர் சண்முகம் ஆண்டறிக்கை வாசித்தார்.
    விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேலூர் மாவட்ட தொழிலாளர் நல துணை ஆணையர் ஜெயபாலன் பேசியதாவது:
    மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. மாணவ பருவம் துன்பம் இல்லாத பருவம். மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுடன், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் புதுமைகள் படைக்க வேண்டும் என்றார். பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நல துணை ஆணையர் ஜெயபாலன், கல்லூரித் தாளாளர் பா.செல்வராஜன் பரிசு வழங்கி, பாராட்டிப் பேசினார். முடிவில் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் வெங்கிடேசன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai