சுடச்சுட

  

  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: 330 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 26th March 2017 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. 14 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் போட்டிகளை தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் முன்னிலை வகித்தார். தடகளம், கையுந்துபந்து, கபடி, இறகுபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 330 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  போட்டிகளில் வென்றவர்களுக்கு சனிக்கிழமை மாலை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் க.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ப.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai