சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் விழா நடைபெற்றது.
    விழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதில் இளைஞர்களிடம் பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    விழாவில் அக்ராபாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அக்ராபாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai