சுடச்சுட

  

  ஆரணியை அடுத்த தசராபேட்டை கிராமத்தில் உள்ள கிராம தேவதை அம்மன் கோயிலில் கற்சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  நேத்தபாக்கம் ஊராட்சி, தசராபேட்டை கிராமத்தில் கிராம தேவதை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை திறக்க ஞாயிற்றுக்கிழமை காலை பூசாரி சென்றார்.
  அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள மூலவர் சிலை, கன்னிமார் சிலை, பீடம் ஆகியற்றை மர்ம நபர்கள் கடப்பாரையால் தாக்கி சேதப்படுத்தியிருந்தது தெரியவந்ததாம்.
  இதுகுறித்து கோயில் நிர்வாகி எஸ்.வேதாந்தியிடம் பூசாரி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வேதாந்தி புகார் அளித்தார். இதனடிப்படையில், கோயிலில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai