Enable Javscript for better performance
இளைஞர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பட்டு மளிகையில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடந்த 23-ஆம் தேதி முதல் காணவில்லை.
    ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பட்டு மளிகையில் அதே பகுதியில் உள்ள கோபால் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (26) பணிபுரிந்து வந்தார்.
    இவர், கடந்த 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு பணிக்குச் சென்றார். பின்னர், 11 மணியளவில் பட்டு மளிகையில் இருந்து வெளியே சென்ற சுரேஷ், மீண்டும் பணிக்கு திரும்பவில்லையாம்.
    பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து பழனி ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai