சுடச்சுட

  

  சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

  By DIN  |   Published on : 27th March 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் 6 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமம், வடக்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் விவசாயி சீனுவாசன் (43). இவர், சனிக்கிழமை இரவு இவரது மனைவி உமாமகேஸ்வரி மற்றும் மகன்களுடன் அவரது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
  நள்ளிரவில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மற்றொரு அறையில் இருந்த பார் வெள்ளி உள்பட 6 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனர்.
  காலையில் எழுந்த உமாமகேஸ்வரி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து அறிந்த சீனிவாசன், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
  அதன்பேரில், போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, சார்பு ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai