சுடச்சுட

  

  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தப் பழகுங்கள்: மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுரை

  By DIN  |   Published on : 27th March 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த பழகுங்கள் என்று மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஆர்.ஜெயந்தி அறிவுரை வழங்கினார்.
  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, தூறல்.. தணித்திடுவோம் தாகத்தை... என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணை முதல்வர் ஆர்.நாகராணி தலைமை வகித்தார். பொது மருத்துவத் துறைத் தலைவர் ஷகில் அஹமத் முன்னிலை வகித்தார். உடற்கூறு மருத்துவர் ஜி.கமலக்கண்ணன் வரவேற்றார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
  வறட்சி காரணமாக கிணறு, ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெற்றோர், அண்ணன், தங்கை மற்றும் உறவினர்களிடம் விளக்க வேண்டும். மழைக்காலமாக இருந்தாலும் கூட தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
  இதைத் தொடர்ந்து, தண்ணீர் சிக் கனம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர்
  கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai