சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஒன்றியத்தில் தடுப்பணை கட்ட பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 27th March 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலர்கள், பணித்தளப் பொறுப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்புக்கு திருவண்ணாமலை ஊரக உபகோட்ட உதவிச் செயற்பொறியாளர் நாகையா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.கே.லட்சுமி நரசிம்மன், காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தடுப்பணைகள் கட்டுவதன் நோக்கம், மழைநீர் சேகரிப்பு, வறட்சியான காலகட்டத்தில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் குறித்து விளக்கிப் பேசினார்.
    மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து தடுப்பணைகளை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், தடுப்பணைகள் கட்டும் மாதிரி வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் குறித்து பயிற்சியளித்தார்.
    இதில், அனைத்து ஊராட்சிகளின் செயலர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai