Enable Javscript for better performance
தொடர் சாராய விற்பனை:குண்டர் சட்டத்தில் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை, சமுத்திரம், தண்டராம்பட்டு, போளூர் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி மாதம் போலீஸார் சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாராயம் விற்றதாக தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் ராஜேந்திரன் (50), கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூர் ராமமூர்த்தி (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    எனவே, இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற ஆட்சியர், ராஜேந்திரன், ராமமூர்த்தி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai