Enable Javscript for better performance
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.நமச்சிவாயம், மாவட்டப் பொருளாளர் ஏ.பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கடந்த 10-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
    இந்தக் குழுவின் முடிவின்படி, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உதயசந்திரன், வெகுதூரத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் எஸ்.சிவப்பிரகாசம், மாவட்ட இணைச் செயலர்கள் மா.ரவி, மதன், செய்தித் தொடர்பாளர் ஜி.ராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai