சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஷார்ப் (66). இவர், கடந்த வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    இதில் பலத்த காயமடைந்த ஷார்ப்பை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷார்ப் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai