சுடச்சுட

    

    மின்மோட்டாரை பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: வந்தவாசி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 27th March 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி நகராட்சிப் பகுதியில் குடிநீர் எடுக்க மின்மோட்டாரை பயன்படுத்தினால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி எச்சரித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளதால் வந்தவாசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள கிணறுகளிலும், நகராட்சி சார்பில் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
    எனவே, நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீர் எடுக்க மின்மோட்டாரை பயன்படுத்தினால், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai