சுடச்சுட

  

  அகஸ்தீஸ்வரர் கோயிலில் 31-ல் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

  By DIN  |   Published on : 28th March 2017 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேட்டவலம் அகஸ்தீஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  1,600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 10 நாள்கள்  கொண்டாடப்பட்டு வருகிறது.
  அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  இதையொட்டி, 31-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.
  6 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் சிவாச்சாரியர்கள் பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றுகின்றனர். இதில், வேட்டவலம் ஜமீன் மகேந்திர பண்டாரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai