Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: ஆட்சியரிடம் மக்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு  அளித்தனர்.
    போளூர் அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் உள்ள மாம்பட்டு, ஜடதாரிகுப்பம், ராமாபுரம் ஆகிய கிராமங்கள் 9 வார்டுகளைக் கொண்டதாகும். இந்த வார்டுகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில், 2 திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துள்ளனர்.
    இதில் சில ஆழ்துளைக் கிணறு பம்புகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.  சிலவற்றில் மட்டும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
    இதில் சாவடித் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு மற்றும் ஜடதாரிகுப்பத்தில் சில தெருக்களுக்கு,  
    10 நாள்களுக்கு அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்  செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai