சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே கோயிலில் இருந்து வெண்கல மணியை திருடிக் கொண்டு ஓடியவர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (38). இவர், திங்கள்கிழமை காலை காட்டாம்பூண்டி ஏரிக் கரையில் உள்ள எல்லையம்மன் கோயில் அருகே நடந்து சென்றார்.
    அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோயிலில் இருந்த வெண்கல மணியை திருடிக் கொண்டு ஓடினார்.
    இதைப் பார்த்த ஆனந்தன் கூச்சலிட்டார். பொதுமக்கள் திரண்டு வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து, தச்சம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் திருவண்ணாமலை, அண்ணா நகர் ஜான்பாஷா (37) என்பது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். வெண்கல மணி பறிமுதல் செய்யப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai