சுடச்சுட

    

    செங்கம் பகுதியில் மர்மக் காய்ச்சல்: மருத்துவக் குழுவினர் சிகிச்சை

    By DIN  |   Published on : 28th March 2017 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம், அண்டப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக 20-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
    இத்தகவல் அறிந்த மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்து அலுவலர் சிந்தனாசங்கர் தலைமையில் அண்டப்பேட்டை பகுதியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    மேலும், அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என ஆய்வுசெய்து காய்ச்சல் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
    காய்ச்சல் உள்ளவர்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு மருத்துவக் குழுவிணர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai