Enable Javscript for better performance
தமிழ்ச் சங்க சிறப்பு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழும், பொதுவுடைமை இயக்கங்களும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சீனி.கார்த்திகேயன், செயலாளர் க.காதர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    துணைச் செயலாளர் ச.ஆ.அண்ணாமலை வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழும், பொதுவுடைமை இயக்கங்களும் என்ற தலைப்பில் பேசினார்.
    இதில், தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற மாநிலச் செயலாளர் பெ.அன்பு, தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் மான்விழி, பொருளாளர் சி.எஸ்.துரை, துணைத் தலைவர்கள் தே.இதயாள், சொ.சேகர், எழுத்தாளர் பி.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் கோ.சாந்தமூர்த்தி, கி.பூ.வேந்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இதையொட்டி, செல்லங்குப்பம் சுப்பிரமணி குழுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி, கோவி.செல்வராஜ் இயக்கத்தில் செல்லாக்காசு என்ற நாடகம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai