சுடச்சுட

  

  "தமிழ் எழுத, படிக்கத் தெரியாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது'

  By DIN  |   Published on : 28th March 2017 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துகளை எழுத, படிக்கத் தெரியாமல் எந்த வகுப்பிலும் இருக்கவே கூடாது என மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார் தலைமையாசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
   அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனக்காவூர் வட்டார வள மையத்தில் மீளாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார், கற்றல் அடைவு நிலை குறித்த கலந்துரையாடல் ஒவ்வொரு பள்ளியாக ஆய்வு செய்து மாணவர்களின் அடிப்படை திறன்கள், தேர்ச்சி விகிதம் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணித் தன்மை குறித்த செயல் கூறுகளை கேட்டறிந்தார்.
   தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், பள்ளியில் மாணவர்களின் கற்றல் அடைவு மேம்படவும், மாவட்டத்தின் கல்வி தரம் உயர வேண்டும். மாணவர்கள் அந்தந்த வகுப்புகளில் கற்க வேண்டிய திறன்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்த பின்னரே அடுத்த வகுப்புக்கு தேர்வு செய்து அனுப்புதல் வேண்டும், தேர்ச்சி அறிக்கை பெற்ற பின்னரே மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.  
   மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் எழுத்துகள் எழுத, படிக்கத் தெரியாமல் எந்த வகுப்பிலும் இருக்கவே கூடாது.
   கணித பாடத்தை எளிமையாக கற்று உணரவும், தமிழ் எழுத்துகளை பதங்கள் புரிந்து படிக்கவும், எளிய உத்திகளை ஆசிரியர்கள் பயன்படுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
  மாவட்ட உதவித் திட்ட அலுவலர் சுப்பிரமணியன் பங்கேற்று அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் தனித் தனியாக ஆய்வு செய்து மாணவர்களின் கற்றல் நிலை குறித்து கேட்டறிந்தார்.  
  மீளாய்வுக் கூட்டத்தில் அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
  ஏற்பாடுகளை அனக்காவூர் தொடக்கக் கல்வி அலுவலர் க.வேலு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.சவுல்ராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai