சுடச்சுட

    

    வந்தவாசி அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.
    காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன் மகள் பச்சையம்மாள் (25). இவர் தனது உறவினர் சின்ராஜ் (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவாசி அடுத்த தெள்ளாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
    வந்தவாசி அடுத்த கீழ்நர்மா கூட்டுச் சாலை அருகே வரும்போது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் பச்சையம்மாளின் சேலை சிக்கியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
    இதில் பலத்த காயமடைந்த பச்சையம்மாள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai