Enable Javscript for better performance
பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு

    By DIN  |   Published on : 28th March 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆட்சியர் மு.வடநேரே பரிசு வழங்கினார்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 782 மனுக்களை ஆட்சியர் மு.வடநேரே பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
    பரிசுத்தொகை வழங்கல்: தொடர்ந்து, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எஸ்.கோகுலவாசன், சி.திவாகர், பி.ரேணுகா, ஏ.யோகிதா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியர்  வழங்கினார்.
    நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தண்டாயுதபாணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai