சுடச்சுட

    

    மண்டலாபிஷேக நிறைவு விழா: விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா

    By DIN  |   Published on : 28th March 2017 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பிப்ரவரி 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 48 நாள்கள் காலை, மாலை வேளைகளில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கோயில் இரண்டாம் பிரகாரத்தில் 108 சங்குகள், 33 கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, புனித நீர் கலசத்தை கோயில் சிவாச்சாரியர்கள் சுமந்து சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், சம்பந்த விநாயகர் மற்றும் அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.
    ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா: தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து வெள்ளி விமான வாகனத்தில் விநாயகர், வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா புறப்பட்டனர்.
     தொடர்ந்து, தேரடித் தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
    வழிநெடுகிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திங்கள்கிழமை அதிகாலை வரை சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai