சுடச்சுட

  

  "மாணவனின் அறிவும், திறமையும்தான் வெற்றியை தீர்மானிக்கும்'

  By DIN  |   Published on : 28th March 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவனின் அறிவும், திறமையும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். பாடத் திட்டங்கள் அல்ல என்று கல்வியாளர் பெருமாள் மணி பேசினார்.
  திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பில், எஸ்கேபி வனிதா இண்டர்நேஷனல் பள்ளி, எஸ்கேபி வனிதா வித்யாலயா மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்படுகிறது.
  இதையொட்டி, "நம் குழந்தைகளின் கல்வியை எதிலிருந்து ஆரம்பிக்கலாம்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  எஸ்.கே.பி. கல்விக் குழுமத் தலைவர் எஸ்.கே.பி.கருணா தலைமை வகித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி விமர்சகரும், கல்வியாளருமான பெருமாள் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், சிபிஎஸ்இ, மெட்ரிக் இரண்டு பாடத் திட்டங்களும் ஒன்றுதான்.
  சிபிஎஸ்இ படிப்பு என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
  மெட்ரிக் படிப்பு என்பது சற்று எளிதாக இருக்கும். மாணவனின் அறிவும், திறமையும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். பாடத் திட்டங்கள் அல்ல என்றார்.
  இதையடுத்து, பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு எஸ்கேபி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.கே.பி.கருணா, கல்வியாளர் பெருமாள் மணி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
  இதில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், சிறுவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai