சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி, காலையில் மூலவர் முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், 31 திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் வேள்வி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா நடைபெற்றது. இதில் வனதுர்க்காதேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
  மேலும், அம்மனுக்கு மகா புஷ்பாஞ்சலி சேவை, ஊஞ்சல் தாலாட்டு, அன்ன தானம் ஆகியவை நடைபெற்றன.
  இதில் திருவலம் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள், கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
  வடவெட்டி: சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலையில் கோபால விநாயகர், பெரியாழி, அங்காளம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  மாலையில் அங்காளம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உலா வந்ததுடன், ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
  மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை, ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி, அன்ன தானம் ஆகியவையும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai