Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், கல்விச் சுற்றுலாவாக வேலூர் கோட்டைக்குச் சென்று வந்தனர்.
    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார். முதுகலை ஆசிரியர் டி.புகழேந்தி தலைமையில் மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்றனர். பட்டதாரி ஆசிரியர் டி.விஜய் ஆனந்த், இடைநிலை உதவித் தலைமை ஆசிரியர் எம்.ராமலிங்கம், ஆசிரியைகள் கே.சிவகலை, பியுலா கல்யாணி, அருங்கலை ஆகியோர் மாணவ, மாணவிகளை வழிநடத்தினர்.
     சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், அரியூர் தங்கக் கோயில் உள்ளிட்ட பகுதிகளை மாணவ, மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai