Enable Javscript for better performance
ஆரம்ப நிலையிலேயே காசநோயை குணப்படுத்தலாம்: மருத்துவமனை துணை இயக்குநர்- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்ப நிலையிலேயே காசநோயை குணப்படுத்தலாம்: மருத்துவமனை துணை இயக்குநர்

    By DIN  |   Published on : 29th March 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே காசநோயை குணப்படுத்தலாம் என்று காசநோய் மருத்துவமனை துணை இயக்குநர் பி.அசோக் பேசினார்.
    திருவண்ணாமலை மாவட்ட காசநோய் மையம் சார்பில், உலக காசநோய் தின கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலையை அடுத்த கண்ணக்குறுக்கையில் உள்ள அருண வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    கல்லூரித் தாளாளர் கே.சுரேஷ், காசநோய் மைய மருத்துவர் எம்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூயின் ஆங்கில துறைத் தலைவர் ஆர்.முருகன் வரவேற்றார். காசநோய் மருத்துவமனை துணை இயக்குநர் பி.அசோக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:
    காசநோயால் 5 நிமிடத்துக்கு 2 பேர் உயிரிழக்கின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சை பெறாவிட்டால், மருந்துக்கு கட்டுப்படாத வீரியமிக்க காசநோயாக மாறும் அபாயம் ஏற்படும்.
    விரைவான பரிசோதனை மற்றும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றார்.
    மேலும், காசநோய் கிருமியால் நோய் பரவும் விதம், நவீன பரிசோதனை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க, வழக்கங்கள் குறித்தும் அவர் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.
    இதைத் தொடர்ந்து, காசநோய் விழிப்புணர்வு பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    இதில், சிகிச்சை அமைப்பாளர் ஏ.பிருந்தா கஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரதாப், தினேஷ்குமார், குணசீலன், மேற்பார்வையாளர் மதுசூதனன், கல்லூரிப் பேராசிரியர் உஷாதேவி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், காசநோய் மையப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai