சுடச்சுட

  

  திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் கொல்லகொட்டாய் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ளது இனாம்காரியந்தல் கிராமம். இங்குள்ள கொல்லகொட்டாய் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு மின்சார வசதிகூட இல்லையாம். விவசாயத்தை மட்டுமே பிரதானத் தொழிலாகக்கொண்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
  இந்நிலையில், இனாம்காரியந்தல் பிரதான சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து கொல்லகொட்டாய் பகுதிக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் கொல்லகொட்டாய் பகுதியில் மதுபானக் கடை அமைப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லகொட்டாய் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டால், விவசாயத் தொழில் பாதிக்கப்படும். மின்வசதி கூட இல்லாமல் வசித்து வரும் எங்கள் பகுதி பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, இந்தப் பகுதிக்கு டாஸ்மாக் மதுபானக் கடையை மாற்றக்கூடாது.
  எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறந்தால் ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai