சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த மருத்துவாம்பாடி கிராமம், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (65). இவரது சகோதரர்கள் மூர்த்தி (50), சங்கர் (40). இவர்கள் மூவருக்கும் பொது இடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு பிரச்னைக்குரிய பொது இடத்தில் கண்ணன் மனைவி கஸ்தூரி சமையல் செய்தாராம். அப்போது, அங்கு வந்த மூர்த்தி, சங்கர் ஆகியோர் கஸ்தூரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
    தகவலறிந்த கண்ணன், அவரது மகன் சிவக்குமார் ஆகியோர் வந்து தட்டிக் கேட்டனராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், கண்ணன், மூர்த்தி ஆகியோர் தனித்தனியே திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து மூர்த்தி, சங்கர், கண்ணன் மகன் சிவக்குமார் (25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai