சுடச்சுட

    

    உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை கிளையின் இலக்கியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கோவிந்தசாமி வரவேற்றார்.
    சாத்தனூர் புலவர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் என்ற தலைப்பிலும், துணைச் செயலர் வேலாயுதம், தொல்காப்பியம் உயிர் மயங்கியல் என்ற தலைப்பிலும், வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணி, வான் சிறப்பு என்ற தலைப்பிலும் பேசினர்.
    இதில், தமிழக அரசு விருது பெற்ற திருக்குறள் தொண்டு மைய துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai