சுடச்சுட

    

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட மகளிரணி புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் சேத்துப்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் வசந்தராஜ் கலந்துகொண்டு, மாவட்ட மகளிரணித் தலைவியாக வனமயில்நந்தகுமார், மாவட்டச் செயலராக மரியதாரா மற்றும் ஒன்றிய, நகர மகளிரணி நிர்வாகிகளை தேர்வு செய்து, அதற்கான சான்றுகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளர் சத்தியன், நகரத் தலைவி ராணி, மாவட்ட துணைத் தலைவர் மணவாளன், முன்னாள் கவுன்சிலர் காசிநாதன், நகர துணைத் தலைவர் பாண்டு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai