சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு திருவண்ணாமலை கோட்டத் தலைவர் பி.தேவபாலன் தலைமை வகித்தார்.
  கோட்ட கெளரவத் தலைவர் பி.கணேசன் முன்னிலை வகித்தார். 7-ஆவது ஊதியக்குழுவின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு துரோகம் செய்யும் இலாகாவை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை கோட்டச் செயலர் என்.ராஜேந்திரன், பொருளர் டி.பாபு ஆகியோர்
  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
  இதில், ஆரணி கோட்டச் செயலர் சி.முனியன், தலைவர் ஆர்.பெருமாள், பொருளர் ஜெ.டேவிட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai