Enable Javscript for better performance
குடிநீர்ப் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, விரைந்து வந்த அதிகாரிகள் ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். எனினும், குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இந்நிலையில், பெருங்குளத்தூர் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால், புதிதாக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
     இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai