சுடச்சுட

  

  செய்யாறு வட்டத்தில் வருவாய்த் துறை சார்பில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவின்பேரில், செய்யாறு சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் மேற்பார்வையில், செய்யாறு வட்டத்தில் கிராம நத்தம், பாட்டை, தீர்வு ஏற்படாத புலங்கள், தோப்பு, நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.
  காழியூர், செய்யாற்றைவென்றான், புளூந்தை, வெள்ளேரிப்பட்டு, பாராசூர் ஆகிய கிராமங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் செய்யாறு வட்டாட்சியர் ஜெயராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் முரளி, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், ஸ்ரீதேவி, கோமதி, பிரபு, தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai